கோவையில் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் பொன்குமார் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு மாநாடு கோவை கொடிசியாவில் 12 ந்தேதி நடைபெற உள்ளது.
இதில், அமைச்சர்கள் முத்துச்சாமி, மு.பெ.சாமிநாதன், செந் தில் பாலாஜி, கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இதில் 5 ஆயிரம் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் பாதுகாப்புடன் உள்ளனர். அவர்களும் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றனர். இந்தியாவிலேயே கல்வி, பொருளாதாரத்தில் தமிழகம் 2 வது இடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.