தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழாவையொட்டி கோவை மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கோவை பீளமேட்டில் உள்ள எஸ்ஆர்எம் அலுவலகம் முன்பு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது
கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்க மாவட்ட தலைவர் ராக்கிமுத்து ,மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலை மையில் நடைபெற்ற விழாவில், தொமுச பேரவை மாநில துணைத் தலைவர் ரத்தினவேல், கோவை மாநகர் மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ் ஆகியோர் கலந்துகொண்டு, தொமுச கொடியேற்றி வைத்து, டாஸ்மாக் தொழிலாளர் குடும்பத்தினருக்கு கல்வி உதவித்தொகை, மரக்கன்றுக்கள் மற்றும் அசைவ உணவுகளை வழங்கினர்.
இதில், பகுதி கழக செயலாளர் செந்தமிழ் செல்வன், மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால், தலைமை செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தனபால், வட்டக்கழக செயலாளர் மாடசாமி, சிடிசி மணி, டாஸ்மாக் தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.