கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் 79-வது சுதந்திர தினத்தையொட்டி மாவட்ட ஆட்சி தலைவர் பவன்குமார் இன்று (15- ம் தேதி) காலை சரியாக 9 மணிக்கு தேசிய கொடி ஏற்றி போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஜீப் காரில் ஏறி பார்வையிட்டார். அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சி தலைவர் பல வர்ண கலர் பலுன்கள் மற்றும் புறாக்களை வானில் பறக்கவிட்டார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சி தலைவர் நல திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் கோவை மாநகர போலீல் கமிஷனர் சரவண சுந்தர் டி.ஐ.ஜி. சசிமோகன் துணை கமிஷனர்கள் தேவநாதன் ராஜ்கண்ணா போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் டி.ஆர்.ஓ. சர்மிளா உள்பட அதிகாரிகள் அலுவலர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



