கோவை மாவட்ட தேசிய குழந்தை தொழிலா ளர் திட்டம் (NATIONAL CHILD LABOUR PROJECT) எஸ்என்எம்வி (SNMV) கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட(NATIONAL SERVICE SCHEME)அமைப்பு சார்பில் சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின கருத்தரங்கம் மற் றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் முனைவர் போ.சுப்பிரமணி தலைமை தாங்கினார். நாட்டு நலப் பணித் திட்ட (NSS)அலுவலர் க.லெனின்பாரதி வரவேற்றார். மேலாண்மை துறை இயக்குநர் முனைவர் கே.முத்துகுமார், வணிக வியல் புலத்தலைவர் முனைவர் வி.பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் கோவை மாவட்ட திட்ட இயக்குநர் டி.வி.விஜயகுமார், ‘குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம், சமூக நீதியை காப்போம்’ எனும் தலைப்பில் பேசியதாவது:
எல்லா குழந்தைகளும் கட்டாயம் கல்வி பெற வேண்டும் என்று ஏட்டள வில் இல்லாது அதனை செயல்படுத்த அனைத்து முயற்சிகளையும் அரசுடன் இணைந்து அனைவரும் மேற்கொள்ள வேண்டும்.
பெற்றோர்களும் தாம் பெற்ற குழந்தைகளுக்கு உணவும், கல்வியும் அளிப்பதே கடமை என்று உணர வேண்டும். வறுமையை காரணம் காட்டியோ, பணத்தேவையை காரணம் காட்டியோ குழந்தைகளை வேலைக்கு அனுப்பக் கூடாது.
குழந்தைத் தொழில்முறையை ஒழிப் பது பொது சமூகத்தின் கடமை என்றார்.
குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெ.ஜான் மனோகரன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை எம்.சிவரஞ்சனி, செல்வ ஜெயந்தி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.