கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் இந்திய பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வர்த்தக சபை தலைவர் ஸ்ரீ ராமுலு தலைமை தாங்கினார். செயலாளர் அண்ணாமலை வரவேற்பு பேசினார். நிகழ்ச்சியில் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் டாக்டர் ஆனந்த நாகேஸ்வரன் பங்கேற்று பேசினார்.
இந்திய பொருளாதா ரம் தற்போது சீரான நிலையில் உள்ளது.
அடுத்தடுத்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. 2030க்கு பின் வளர்ச்சி பாதிப்பு ஏற்படும். முறையற்ற உணவு பழக்க வழக்கங்களால் இன்றைய இளைஞர்களின் செயல் பாடு குறைவாகும்.
இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ள இளைஞர்கள் உணவு பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடு வேலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கோவையில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் தொழிலதிபர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.
தொழில்துறைக்கு வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்க கோரி பல்வேறு கோரிக்கைகளை தொழிலதிபர்கள் முன் வைத்தனர்.



