fbpx
Homeபிற செய்திகள்பங்கு சந்தையில் நீண்டகால முதலீடே பயனளிக்கும் தேசிய பங்கு சந்தை நிர்வாக இயக்குநர் தகவல்

பங்கு சந்தையில் நீண்டகால முதலீடே பயனளிக்கும் தேசிய பங்கு சந்தை நிர்வாக இயக்குநர் தகவல்

பங்கு சந்தையில் நீண்டகால முதலீடே சிறந்த பயனளிக்கும் என தேசிய பங்கு சந்தை நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான ஆஷிஷ்குமார் சவுகான் முதலீட்டாளர்களுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:
தேசிய பங்கு சந்தையில் “முஹுரத் வர்த்தகம்” என்பது நமது பகிர்ந்து கொள்ளப்பட்ட நிதி விருப்பங்களுக்கு ஒரு சிறந்த சான்றாகும். துடிப்புமிக்க இந்த பங்கு சந்தையில், தீபாவளி விளக்குகள் நம் ஒவ்வொருவரின் இல்லங்களிலும் ஒளிரும்போது மிகுந்த கவனத்துடன் நிறுவனங்களை தேர்வு செய்து முதலீடு செய்து நமது எதிர்கால பயணத்தை தொடங்குகிறோம்.

இந்த நல்ல நேரத்தில் செய்யப்படும் ஒவ்வொரு வர்த்தகமும் முதலீட்டாளர்களிடையே வளர்ச்சி, ஒற்றுமைக்கு உறுதியளிக்கிறது. மேலும் முதலீட்டாளர்கள் தேசிய பங்குச் சந்தையில் பதிவு செய்த இடைத்தரகர்களுடன் மட்டுமே பங்குகள் முதலீடு தொடர்பான வர்த்தகத்தை கையாளவும், எந்தவித கட்டுப்பாடும் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

பங்குச் சந்தை முதலீடு என்பது நீண்ட கால செல்வத்தை உருவாக்கும் ஒரு துறையாகும். எனவே இதற்கு பொறுமை மிகவும் அவசியம். இதனால் ஏற்படும் விரும்பத்தகாத பல்வேறு அனுபவங்கள் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களை மீண்டும் பங்கு சந்தையில் நுழையவிடாமல் மன சோர்வடைய செய்கிறது.

எனவே நீண்ட கால முதலீடே சிறந்த பயன் அளிக்கும். எங்களின் இனிய முஹுரத் வர்த்தகம், ஒவ்வொரு வர்த்தகமும் வலிமையானதாகவும், வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான நமது கூட்டு முயற்சியின் உறுதியை குறிக்கிறது. இவ்வாறு ஆஷிஷ்குமார் சவுகான் கூறியுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img