fbpx
Homeபிற செய்திகள்‘கேம்போர்டிக்ஸ் 2023’: கோவை கேம்போர்டு சர்வதேச பள்ளி விளையாட்டு விழா

‘கேம்போர்டிக்ஸ் 2023’: கோவை கேம்போர்டு சர்வதேச பள்ளி விளையாட்டு விழா

கோவை கேம்போர்டு இன்டர் நேஷனல் பள்ளியின் 14வது ஆண்டு விளையாட்டு மற்றும் தடகளப் போட்டி ‘கேம்போர்டிக்ஸ் 2023’ விழா கடந்த 23ம் தேதி கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

குரூப் கேப்டன் எம்.எஸ்.சுரேஸ் (ஓய்வு) தலைமை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்திய விமானப்படையில் 32 ஆண்டுகள் சேவையாற்றிய ஒரு தொழில்முறை ராணுவ விமானி இவர்.

மிக் வரிசை ஜெட் போர் விமானங்கள், கிளைடர் விமானங்களில் போர் விமானத்தில் பறக்கும் பயிற்றுவிப்பாளராக பல்வேறு அனுபவங்களைக் கொண்டு ‘விமானத்தின் காவலர்’ என தேசத்திற்கு சேவை செய்தவர். இவர் AF ஏரோனாட்டிக் குழுவான ‘தி தண்டர்போல்ட்’ உறுப்பினராகவும் இருந்தவர் மற்றும் நாடு முழுவதும் விமான நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்.

பாடல் குழுவின் இறைவணக்கப் பாடலுடன் விழா தொடங்கப்பட்டது. 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் என்.சி.சி கேப்டன்களும் இணைந்து நடத்திய அணிவகுப்பு நிகழ்ச்சி கண்களைக் கவர்ந்தது. சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணத்தின் பின்னர் சிறப்பு விருந்தினர்களின் தலைமையில் ‘கேம்போர்டிக்ஸ் 2023ஆரம்பமானது.

பல்வேறு விளையாட்டுகளில் ஆண்டு முழுவதும் வெற்றி பெற்ற மாணவர்கள், விளையாட்டுத் திறமையில் சிறந்து விளங்குபவர்கள் ஜோதி தாங்கி உற்சாகத்துடன் வலம் வந்தனர்.

இதனைத் தொடர்நது 1 முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பால் ஒர்க் அவுட், பிளாக் ஸ்லிம்னாஸ்டிக்ஸ், ஜாக்ஸ் வித் நுன்சாக் டிஸ்பிளே, ப்ளோரல் மற்றும் ஹுப்ஸ் டிஸ்பிளே, என்.சி.சி - பேண்ட் என பல்வேறு காட்சிகள் நடத்தப்பட்டன. விளையாட்டு வீரர்களுக்கு தடகள போட்டிகளும் அனைவரின் முன்னிலையில் நடத்தப்பட்டது.

அட்மிரல்ஸ் என்னும் அணி ஒட்டு மொத்த விளையாட்டில் சிறந்த சேம்பியன் கோப்பையை வென்றது மற்றும் சிறந்த மார்ச் பாஸ்ட்டிற்கான கோப்பையை மார்ஷல்ஸ் அணியினர் பெற்று வெற்றி வாகையைச் சூடினார்கள். சிறப்பு விருந்தினர் தனது உரையாடலில் உடல் உழைப்பு மற்றும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவங்களை நாம் எவ்வாறு கையாள வேண்டும் என்பதையும் அது எவ்வாறு நம் வாழ்வில் ஒழுக்கத்தை வலியுறுத்துகிறது என்பது குறித்தும் நெகிழ்ச்சி உரையாற்றினார்.

அதோடு மட்டும் இல்லாமல் இன்றைய நாட்களில் குழந்தைகளின் விளையாட்டுகளை வீட்டிற்குள் விளையாட செலவு செய்வதை விட்டு வெளியே சென்று விளையாடி சமூகத்துடன் இணைய செய்ய பெற்றோர்களுக்கும் அறிவுரையுடன் நம்பிக்கையையும் ஏற்படுத்தினார்.

பள்ளி இசைக்குழுவினர் மூலம் தேசியகீதம் இசைக்கப்பட்டது மற்றும் கொடியிறங்கும் நிகழ்ச்சிக்குப்பின் ‘கேம்போர்டிக்ஸ் 2023ஆனது நிறைவு பெற்றது.

இந்த நிகழ்ச்சியைப் பள்ளித் தலைவர் என்.அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ், பள்ளி முதல்வர் பூனம் சியால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img