கோவை பில்லூர் 3வது கூட்டுக்குடிநீர் திட்டம் தேக்கம்பட்டி, மருதூர் ஊராட்சி பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட நீர் ஏற்று ராட்சதக் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருவதை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் சரவணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.
உடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் செந்தில்குமார், மேற்பார்வை பொறியாளர் ராஜ், செயற்பொறியாளர்கள் செல்லமுத்து, லட்சுமணன், உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், பட்டன், ராதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.