நூல் தயாரிப்பில் உலகளவில் முன்னணி வகிப்பதுடன் ஆடைகள் மற்றும் காலணிகளுக்கான அமைப்பு ரீதியிலான கூறுகள் உற்பத்தியிலும் பிரபலமான கோட்ஸ் (Coats) நிறுவனம், மதுரை மாநகரில் நூற்பு மற்றும் முறுக் கேற்றுதலுக்கான முன்னோடி ஆலையை உள்ளடக்கிய நிலைப்புத் தன்மைக்கான நவீன மையத்தை திறந்து வைத்தது.
கோட்ஸ் நிறுவனத்தின் குழும தலைமை செயல் அலுவலர் ராஜிவ் சர்மா கூறியதாவது: கோட்ஸ் நிறுவனத்தில் நூற்பு மற்றும் முறுக்கேற்றலுக்கான ‘உயர் நேர்த்தி மையமாக’ மதுரையில் மிக நவீன உற்பத்தி மையம் தொடங்கப்படுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அம்சங்கள்
நிகர பூஜ்ஜியம் என்பது இலக்கை நோக்கிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு மீது வலுவான பொறுப்புறுதி கொண்டிருக்கிறோம். நமது செயல்பாடுகளில் பயன்படுத்தப்படும் மின்சக்தி /ஆற்றலை பசுமை ஆற்றலாக மாற்றும் உத்தி மற்றும் பொருட்களின் நிலைமாற்றம் ஆகியவற்றோடு சேர்த்து இம்மையமும் அடிப்படை ஆதார அம்சங்களாக இருக்கும் என்றார்.
கடந்த 4 ஆண்டுகள் காலஅளவில் ஆற்றல், உள்ளீட்டுப் பொருட்கள், நீர், கழிவு மற்றும் பணியாளர்கள் என பல்வேறு பிரிவுகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதில் கோட்ஸ் நிறுவனம் முன்னேற்றத்தைப் பதிவுசெய்திருக்கிறது.
இதே பிரிவுகளில் 2026-ம் ஆண்டுக்குள் அடைவ தற்கான புதிய இலக்குகளையும் கோட்ஸ் இப்போது அறிவித்திருக்கிறது. இந்நிறுவனத்தின் 2030-ம் ஆண் டுக்கான பொறுப்புறுதி இலக்குகளை அடைவதை நோக்கிய தெளிவான கண்ணோட்டங்களை இப் போது அறிவிக்கப்பட்டிருக்கும் இலக்குகள் சுட்டிக் காட்டுகின்றன.
மதுரையில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த புதிய நிலைப்புத்தன்மைக்கான மையம், சீனாவின் ஷென்சென் நகரில் அமைந்துள்ள கோட்ஸ் நிலைப்புத்தன்மை மையத்தோடு இணைந்து செயல்படும்.