fbpx
Homeபிற செய்திகள்கோவையில் பீம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் புதிதாக அறிமுகம்

கோவையில் பீம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் புதிதாக அறிமுகம்

கோவையில் ஓஷோ டெக் நிறுவனம் சார்பில் புதிதாக இரு சக்கரம் வாகனம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது. பீம் எலக்ட்ரிக்என்ற இந்த வாகனத்தை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

விழாவுக்கு வந்த அனைவரையும் ஓசோ டெக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பரதன் வரவேற்று பேசினார் விழாவில் ரூட்ஸ் குரூப் ஆப் கம்பெனி இயக்குனர் டாக்டர் சந்திரசேகர், வசுந்த ராய் மற்றும் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ஓசோ டெக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பரதன் நிருபர் களிடம் கூறியதாவது:- கோவையைச் சேர்ந்த ஓசோ டெக் நிறுவனம் அனைத்துபீம் எலக்ட்ரிக் என்ற பெயரில் மின்சார இரு சக்கர வாகனத்தை புதிதாக அறிமுகம் செய்து உள்ளது.இந்த வாகனம் சக்தி வாய்ந்த பேட்டரியை உள்ளடக்கியது.

மேலும் ஒரு முறை சார்ஜிங் செய்தால் 525 கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல முடியும். நீண்ட பயணங்களுக்கு சரியான துணையாக இது அமையும்.
இந்த வாகனத்தில் ப்ளூடூத் இணைப்பு மற்றும் மொபைல் செயலியுடன் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட் வாகனம் ஆகும். 7 ஆண்டுகள் வரை உத்திரவாதம் உண்டு.

இந்த வாகனம் 6 வெவ்வேறு வகைகளில் கிடைக்கும். இதன் ஷோரூம் விலை ரூபாய் 65 ஆயிரத்து 990 முதல், ரூபாய் ஒரு லட்சத்து 9990 வரை உள்ளது. மேற்கண்டவாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img