கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் தமிழ்த்துறையின் சார்பாக தமிழ் இலக்கியத்தில் உளவியல் சிந்தனைகள் எனும் பொருண்மையில் இரு நாட்கள் பன்னாட்டு கருத்தரங்கு நடந்தது.
கலை மற்றும் சமூக அறிவியல் புல முதன்மையர் முனைவர் ம.மனோன்மணி வரவேற்றார். தலைமை தாங்கி வேந்தர் ச.ப.தியாகராஜன் பேசியதாவது:
தமிழுக்கு தொண்டு செய்பவர்களை எல்லாம் போற்ற வேண்டும்.
எந்தவொரு மொழியாக இருந்தாலும் சரி, உள நலம் பற்றித் தான் பேசுகிறது. தமிழை பிற துறைகளோடு சேர்ந்து ஆய்வு செய்யும்போது, பெரிய அளவில் வெற்றி பெற முடியும். மாணவிகள் தமிழறிவு, பகுத்தறிவு, பட்டறிவு பெற்று பெரிய அறிஞர்களாக வளர வேண்டும் என்றார்.
சிறப்பு விருந்தினர்
சிறப்பு விருந்தினர் சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ய.மணிகண்டன் பேசியதாவது:
உலக இலக்கியங்கள் அனைத்தும் மனித உளவியலைத் தான் போதிக்கின்றன.
மனித வாழ்க்கை 100 பக்க புத்தகம். பிழைத்திருத்தம் போட்டால் 1000 பக்கத்தில் அடங்காது. இன்றைய இலக்கிய உலகில் புதிய புதிய சிந்த னைகளை முன்வைக்கிறார்கள். அனைத்து உலக இலக்கியங்களிலும் மனித மன உணர்வுகள் பிரதிபலிக்கப் பட்டுள்ளன. தமிழண்ணல் சங்க இலக் கியத்தை உளவியல் இலக்கியம் என்று குறிப்பிட்டார்.
அக இலக்கியம் 100 சதவீதமும் புற இலக்கியம் 75 சதவீதமும் மனித உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. இந்த காட்டில் எல்லா மூங்கில்களும் புல்லாங்குழல் தான்.
நம்பகத்தகுந்த தரவுகளோடு ஆய்வுகள் அமைய வேண் டும். அப்போதுதான் வெற்றி இலக்கை அடைய முடியும் என்றார். மலேசியா சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழக இணைப்பேரா சிரியர் முனைவர் மனோன்மணி தேவி அண்ணாமலை பேசும்போது, இலக்கியம் என்பது உன்னதமான வாழ்வை வாழ்வதற்கான பண்பாடு. மனதிலுள்ள மாசு அகல வேண்டும்.
இலக்கியத்தில் படிக்கும்போது, நம் உள்ளம் விலக வேண்டும். தமிழ்மொழி உளவியல் சார்ந்தது.
மனித நடத்தையை ஆய்வது உளவியல். தமிழ் மொழியை உளவியல் மொழி என்று கூறுவதன் காரணம் அக உணர்வாக இருந்தாலும் சரி, புற உணர்வாக இருந்தாலும் சரி, எதிர்மறையாக இருந்தாலும் சாரி கூறு வதில்லை. உள்ளம் பண்பட்டால் எல்லாம் பண்பாகிவிடும் என்றார்.
துணைவேந்தர் முனைவர் வை.பாரதி ஹரிசங்கர், பதிவாளர் முனைவர் சு.கௌசல்யா ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ச.குருஞானாம்பிகா கருத் தரங்க நோக்கவுரையாற்றினார்.
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.பரணி, சிறப்பு விருந்தினர் குறித்து அறிமுகவுரையாற்றினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் மற்றும் கருத்தரங்க இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ.புஷ்பா நன்றி கூறினார்.