விருந்தோம்பல் துறை மாணவர்களுக்கான இந்தியாவின் மிகப்பெரிய சமையல் போட்டி எவரெஸ்ட் பெட்டர் கிச்சன் கலினரி சேலஞ்ச் (எவரெஸ்ட் பிகேசிசி) நிகழ்வு சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ் மென்ட்டில் நடைபெற்றது.
போட்டியின் பங்கேற்பாளர்கள் சமையல் திறமையில் தங்கள் கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். தென்னிந்திய செஃப் அசோசியேஷன் தலைவர் டாக்டர் கே தாமோதரன், பிரபல செஃப் மற்றும் கின்னஸ் உலக சாதனை ஆசிரியர் ஹரிஷ் ராவ், தமோக்னா சக்ரவர்த்தி, நிர்வாக செஃப் – ரெயின்ட்ரீ ஹோட்டல், சென்னை ஆகியோர் நடுவர்களாக கலந்துகொண்டனர்.
எவரெஸ்ட் பிகேசிசி
எவரெஸ்ட் பிகேசிசி என்பது வளரும் சமையல் கலைஞர்களுக்கு அவர்களின் திறமையை வெளிப்படுத்த ஒரு தனித்துவமான தளத்தை வழங் குவதோடு அவர்கள் தங்கள் எதிர்காலத்தை கட்டமைக்கும் சிறந்த வாய்ப்பையும் வழங்குகிறது.
எவரெஸ்ட் பிகேசிசியின் இந்த 4வது சீசன் போ பால், புவனேஸ்வர், கொல்கத்தா, கோட்டயம், பெங்களூரு, டேராடூன், சண்டிகர், நொய்டா, புனே, வதோதரா, ஜெய்ப்பூர், மும்பை, கோவா, சென்னை, நாக்பூர் ஆகிய 15 நகரங்களில் நடைபெற உள்ளது. பிப். 17, 18-ல் மும்பையில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு அனைத்து நகரங்களிலிருந்தும் வெற் றியாளர்கள் அழைக்கப்படுவார்கள்.
எஸ்ஆர்எம் இன்ஸ்டி டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டின் இயக்குநர் மற்றும் முதல்வர் டாக்டர் டி. ஆண்டனி அசோக் குமார் கூறிய தாவது:
எவரெஸ்ட் பெட்டர் கிச்சன் கலினரி சேலஞ்சின் 4வது பதிப்பை நடத்துவதில் எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மகிழ்ச் சியடைகிறது.
இப்போட்டியானது மாணவர்கள் தங்கள் பல்துறை திறன்களையும் திறமைகளையும் அனுபவிப்பதற்கும் வெளிப் படுத்துவதற்கும் சிறந்த தளத்தை வழங்கியது என்றார்.
பெட்டர் கிச்சனின் வெளியீட்டாளரான ஏக்தா பார்கேவா கூறுகையில், இந்தப் போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு அமெரிக்காவின் ஜெ1 செப் பரிமாற்ற திட்டத்தின் கீழ் 5750 அமெரிக்க டாலர்கள் உதவித்தொகை கிடைக்கும்
அதே வேளையில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர்கள் முறையே 1000 மற்றும் 750 அமெரிக்க டாலர் மதிப்பிலான உதவித்தொ கையை ஒரு வருடப் பயிற் சியுடன் பெறுவார்கள் என்றார்.
எவரெஸ்ட் பிகேசிசியின் சென்னை போட்டிகளின் வெற்றியாளர்களாக எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ் மென்ட்டின் எவரெஸ்ட் சாட் மசாலா அணி தேர்வு செய்யப்பட்டது.
இக் கல்லூரியின் எவரெஸ்ட் தந்தூரி சிக்கன் மசாலா அணி மற்றும் எவரெஸ்ட் ஒயிட் பெப்பர் அணி இரண்டு மற்றும் மூன்றாம் இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டன.