fbpx
Homeபிற செய்திகள்‘சாம்சங் கேலக்ஸி எஸ்23’ சீரிஸ் புதிய சாதனை

‘சாம்சங் கேலக்ஸி எஸ்23’ சீரிஸ் புதிய சாதனை

மிகப்பெரிய நுகர்வோர் பிராண் டான சாம்சங், இந்தியாவில் புதிய அறிமுகமான Galaxy S23க்கான முன்பதிவில் சாதனையை பதிவு செய்துள்ளது.

முதல் 24 மணிநேரத்தில் 140,000 Galaxy S23 சீரிஸ் போன்கள் இந்தியாவில் முன் பதிவானது. இது சாம்சங்கின் ஃப்ளாக்ஷிப் சாதனங்களில் புதிய சாதனை. பிப்.2 அன்று சாம்சங் அதன் Galaxy S23 சீரிஸ்க்கான முன்பதிவை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ரீடெயில் ஸ்டோர்களில் தொடங்கியது.

Galaxy S23 குறிப்பிடத்தக்க வகையில் குறைந்த சுற்றுசூழல் தாக்கத்தை கொண்ட சிறந்த தரமான புதுமை உடைய ஒரு ஜெனரேஷன் லீப் ஆகும். Galaxy S23 சீரிஸின் அட்டகாசமான கேமரா திறன்கள், வரும்கால தயார் நிலை மொபைல் கேமிங் அனுபவம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் ஆகியவற்றுடன் இந்திய நுகர்வோர் மத்தியில் உற்சாகத்தை இந்த முதல் 24 மணிநேரத்தில் பதிவு செய்யப்பட்ட முன்பதிவுகள் காட்டுகின்றன.

நொய்டா

இந்தியாவின் உற்பத்தி மற்றும் வளர்ச்சிக் பாதைக்கான எங்கள் உறுதிப்பாட்டை காட்டும் வகையில், புதியGalaxy S23 சீரிஸ் நொய்டா தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் என்று சாம்சங் இந்தியாவின் மொபைல் பிசினஸின் மூத்த இயக்குனர் குஃப்ரான்ஆலம் கூறினார்.

Galaxy S23 அல்ட்ரா முற்றிலும் புதிய 200MP சென்சாருடன் தனித்துவமான விவரங்களுடன் படங்களை எடுக்கும் வகையில் அடாப்டிவ் பிக்சல்களுடன் வருகிறது.

சூப்பர் குவாட் பிக்சல் AF உடன், ரியர் கேமரா பொருட்களை 50% வேகமாக ஃபோக்கஸ் செய்யும். Galaxy S23 சீரிஸின் ஃப்ரண்ட் கேமரா இப்போது குறைந்த வெளிச்சத்தில் கூட முன் கேமராவிலிருந்து படமெடுக்கக்கூடிய வகையில் நைட் கிராஃபியுடன் டூயல் பிக்சல் ஆட்டோ ஃபோகஸ் தொழில்நுட்பத்துடன் வருகிறது.

டூயல் பிக்சல் ஆட்டோ ஃபோகஸ் தொழில்நுட்பம் ஃப்ரண்ட் கேமராவிலிருந்து 60% வேகமாக ஃபோகஸ் செய்வதை உறுதி செய்கிறது.

Galaxy S23 சீரிஸின் வீடியோக்களில் சூப்பர் HDR, மேம்படுத்தப்பட்ட சத்தம் கட்டுப்பாடு அல்காரிதம் ஆகியவற்றுடன் இரவு நேரத்தில் மென்மையான மற்றும் கூர்மையான வீடியோவிற்காக 2 மடங்கு பரந்த OIS என ஆகியவற்றுடன் அதிக சினிமா அனுபவத்தை பெறலாம்.

படிக்க வேண்டும்

spot_img