அண்ணா பிறந்தநாளையொட்டி தி.மு.க.சார்பில் கோவை காந்திபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந் நிகழ்வில், கழக சொத்துப் பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா. பழனிச்சாமி, தி.மு.க. வழக்கறிஞர் அணி மாநில நிர்வாகி பி.ஆர்.அருள்மொழி, காந்திபுரம் பகுதி கழக செயலாளர் சேதுராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.