கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில் காய்கறிகள் உள்பட அத்யாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க.அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்டவர்கள் தக்காளி,கத்தரி, இஞ்சி,புடலை வாழைக் காய் உள்ளிட்ட காய்கறிகளை கழுத்தில் மாலையாக அணிந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட் டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜுனன் எம். எல் .ஏ., புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி ஆர் ஜி அருண்குமார் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ .தலைமை தாங்கி பேசியதாவது: முதல் அமைச்சர் விலைவாசி உயர்வை பற்றி கவலைப்படாதவராக உள்ளார். தக்காளி உள்ளிட்ட அத்தனை பொருட்களும் விலை உயர்ந்துள்ளது.
அதிமுக ஆட்சியில் காய்கறிகள் விலை உயர்ந்த போது, கூட்டுறவு சங்கங்கள் மூலம் விலையை குறைத்து கொடுத்தோம்.
முதல் அமைச்சர் பெங்களூர் சென்று பிரதமர் வேட்பாளர் யார் என சொல்லாமல் கூட்டம் போட்டுள்ளார்.
திமுக அளித்த 520 வாக்குறுதிகளில் 1 வாக்குறுதியை கூட முழுமையாக நிறைவேற் றவில்லை. திராவிட மாடல் ஆட்சி என சொல்லி பால் விலை, சொத்து வரி, மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவை மாற்றியமைக்க உள்ளதாக ஸ்டாலின் சொல்வது வேடிக்கையாக உள்ளது. பெங்களூர் சென்ற முதல் அமைச்சர் காவிரி நதிநீர் பிரச்சனையை பேசி னாரா? சிங்கம் போல எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார். கொள்கை வேறு, கூட்டணி வேறு என தெளிவாக எடப்பாடி பழனிசாமி சொல்லியுள்ளார். தமிழ்நாட்டு நலனுக்காக கூட்டணி அமைத்துள்ளோம். குடும்பத்திற்காக கூட்டணி அமைக்கவில்லை.
எப்போது பாராளுமன்ற தேர்தல் வந்தாலும் 40 தொகுதிகளிலும், சட்ட மன்ற தேர்தலில் 200 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமி எம் எல் ஏக்கள் கே ஆர் ஜெயராம் ஏ கே செல்வராஜ் அமுல் கந்தசாமி சூலூர் கந்தசாமி தாமோதரன் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.



