அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம், தேசிய கண்டுபிடிப்பு அறக் கட்டளையுடன் இணைந்து கோவை மாவட்டத்தில் பல்வேறு விரிவாக்கச் செயல்பாடுகள் மூலம் ஆய்வை நடத்தி வருகிறது.
இத்திட்டத்தில் கோவை யில் 10 -கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இத்திட்டத்தின் முதன்மை ஆய்வாளர் முனைவர் சு.கௌசல்யா பதிவாளர் மற்றும் பேராசிரியர் அவர்கள் வழி காட்டுதலில் இத்திட்டம் செயல்படுகிறது.
இத்திட்டத்தின் அடுத்தகட்ட பயிற்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட காரமடை மற்றும் பெரிய நாயக்கன் பாளையத்தைச் சார்ந்த விவசாயம் மற்றும் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு தென்னை மரம் ஏறும் கருவி உபயோகிக்கும் முறை பற்றி பயிற்சி வழங்கப்பட்டது.
இக்கருவியின் கண்டு பிடிப்பாளர் டி.ன்.வெங் கட் மற்றும் ஸ்ரீ வரதன் கருவியின் பாகங்கள், தயாரிப்பு முறைகள், சிறப் புகள், தொழில்நுட்ப செயல்பாடுகள் மற்றும் உபயோகிக்கும் முறை என தனித்தனியாக விளக்கினர்.
செயல்முறை பயிற் சியில் அவர்களே இக்கருவியை பயன்படுத்தி தென்னை மரம் ஏறியும் இறங்கியும் இரண்டு மூன்று முறை செயல்முறை பயிற்சி அளித்தனர்.
கருவியை பெண்கள் கைகளில் வைத்தும், மரத்தில் பொருத்தியும் செயல்முறைப்படுத்தி பார்த்தனர்.
பின் மரம் ஏறவும் இறங்கவும் கற்றுக் கொண்டனர். பயிற்சியில் மொத்தம் 15 பயனாளிகளும் அவர்களின் கணவர்கள் மற்றும் ஆர்வமுள்ள பலரும் என மொத்தம் 25 பேர் பங்கேற்றனர்.
இத்திட் டத்தின் துணை ஆய்வாளர் முனைவர் சு. திலகவதி, துணை பேராசிரியர் உணவு மற்றும் சத்துணவு துறை தலைமையில் குப்புச் சிபாளையம் கிராமத்தில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் இத்திட்ட உதவியாளர் இல.மஞ்சு தேவி மற்றும் விவசாயம் மற்றும் உதவிக்குழு பெண்கள் கலந்து கொண்டனர்.