கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக 16 அணிகள் கலந்து கொண்ட கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இறுதியில் வெற்றி பெற்ற அணிக்கு ஊக்கத் தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டது.
கிரிக்கெட் போட்டியை தகவல் தொழில்நுட்ப பிரிவு கோவை மாவட்ட இணைச்செயலாளர் வினோத் குமார் நடத்தினார். வெற்றி பெற்ற அணிக்கு சூலூர் அதிமுக தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜி.குமரவேல் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கினார்,
நிகழ்வில் சூலூர் ஒன்றிய கவுன்சிலர் நவமணி ராமசாமி, காடாம்பாடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அசோக் குமார், வார்டு உறுப்பினர்கள் P.K நடராஜ் ஒன்றிய ஐடி இணை செயலாளர் சதீஷ்குமார், சண்முகசுந்தரம், தமிழ் செல்வம், நடராஜன், சண்முகம் மற்றும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.