fbpx
Homeபிற செய்திகள்கோவை சரக காவல் துறை அதிகாரிகளுடன் ஏடிஜிபி அருண் ஆலோசனை

கோவை சரக காவல் துறை அதிகாரிகளுடன் ஏடிஜிபி அருண் ஆலோசனை

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கோவை காவல் சரகங்களான கோவை, நீலகிரி, திருப்பூர் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த காவல் அதிகாரி களுடன் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், நான்கு மாவட்டத்திலுள்ள சட்டம், ஒழுங்கு சம்பந்தப் பட்ட விஷயங்கள், காவல் துறையின் செயல்பாடுகள், களத்தில் காவல்துறையினர் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், டிஐஜி விஜய குமார் தற்கொலை குறித்தும் விவாதிக்கப்பட் டதாக தெரிகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர், கோவை திருப் பூர் மாநகர காவல் ஆணையர்கள், துணை ஆணையர்கள் திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் தற்கொலை செய்து கொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் உரு வப்படத்திற்கு ஏடிஜிபி அருண் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img