தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் கதர் மற்றும் கிராமப் பொருட்கள் உற்பத்தி & விற்பனை தொடர்பாக வாரிய தலைமை செயல் அலுவலர் சம்பத் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் முன்னிலையில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கதர் வாரியத்தில், உற்பத்தி செய்யப்படும் கதர் கிராமப் பொருட்கள் விநியோகத்திற்கு தேவையான மூலப் பொருட்கள் வழங்குவது தொடர்பாகவும், வாரிய வளர்ச்சிக்கு ஒத்து ழைப்பு வழங்குவது குறித்தும், துறைசார்ந்த அலுவலர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.
மேலும் பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், கடனுதவி வழங்குவது தொடர்பாக மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் உள்ளிட்ட அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் வா.சம்பத், கோவை மெயின் கதரங்காடி, ஆர்.எஸ்.புரம் கதரங்காடி மற்றும் கோவை பட்டு உற்பத்தி மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
இக்கூட்டத்தில், உதவி இயக்குநர் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் (திருப்பூர்) கிரிஐயப்பன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி, துணைப் பதிவாளர் (பொது விநியோகத் திட் டம்) சிவகுமார், மாவட்ட தொழில் மையம் (பொது மேலாளர்) சண்முகசிவா, இருப்பிடம் மருத்துவ அலுவலர் மரு.சரவணபிரியா, சுகாதாரத்துறை அலுவலர்கள், வங்கி அலுவலர்கள், துறைச் சார்ந்த அலுவலர்கள் உட் பட பலர் கலந்து கொண்டனர்.



