fbpx
Homeபிற செய்திகள்கோவை எஸ்.ஐ.ஹெச்.எஸ் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி ஆகஸ்ட் மாதம் முடிவடையும் மாநகர் மாவட்ட திமுக...

கோவை எஸ்.ஐ.ஹெச்.எஸ் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி ஆகஸ்ட் மாதம் முடிவடையும் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தகவல்

கோவை, ஒண்டிப்புதூரில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் சாலையில் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டும்பணி நடைபெற்று வருகிறது.

இறுதிக் கட்டத்தை எட்டி யுள்ள இந்த பாலம் அமைக்கும் பணிகளை நேற்று மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) பார்வையிட்டார். அப்போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் குருமூர்த்தி, உதவி பொறியாளர் ஹரிபிரசாத் மற்றும் அதிகா ரிகள் பார்வையிட்டனர்.அதன் பிறகு நிருபர்களிடம் நா.கார்த் திக் கூறியதாவது. சிங்காநல்லூர் எஸ்ஐ எச்எஸ் காலனி பகுதி சுற்றுவட்டாரத்தில் லட்சக்க ணக்கான மக்கள் வசிக்கிறார்கள். இந்த நிலையில் இங்கு உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல வசதியாக ரயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அதற்கான பணிகள் நடந்தன. ஆனால் அதன் பிறகு 10 ஆண்டுகாலம் இத்திட்டத்தை கைவிட்டு விட்டார்கள். அதன் பிறகு மீண்டும் திமுக ஆட்சி 2021 இல் அமைந்ததும் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வீஸ் சாலை அமைக்க 29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். 2016ஆம் ஆண்டு சிங்கா நல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்வு செய்யப் பட்ட நான் சட்டமன்ற கூட்டங்களில் தொடர்ந்து இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினேன். அதன் பிறகு மீண்டும் 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததும் தொடர்ந்து திட்டத்தை நிறைவேற்ற நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ.வேலு, மேற்கு மண்டல திமுக பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஆகியோர் தொடர்ந்து நடவ டிக்கை எடுத்தனர்.

இத்திட்டத்தில் சர்வீஸ் சாலை அமைக்க மற்றும் நிலம் கையகப்படுத்தப்பட்டவர்க ளுக்கு நிதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு ரூ55.40 கோடி நிதி ஒதுக்கப் பட்டது. அதன் பிறகு இந்த பணிகள் தீவிரமாக நடந்தன.
இன்று அதிகாரிகளுடன் இந்த பணிகளை பார்வையிட்டோம். ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதிக்குள் இந்த பணிகளை முடித்து விடுவார்கள். முதலமைச்சர் இந்த பாலத்தை விரைவில் திறந்து வைப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img