கோவை இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2026-2027 ஆம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி நேற்று துவங்கியது. நிகழ்ச்சியை கோயம்புத்தூர் மண்டல இணைப்பதிவாளர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முன்னதாக, நிலைய முதல்வர் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து, கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் மற்றும் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு உரைகள் இடம்பெற்றன.
இந்நிகழ்ச்சியில் துணைப்பதிவாளர், கோயம்புத்தூர் நகர கூட்டுறவு வங்கி அதிகாரிகள், சிறப்பு விரிவுரையாளர்கள் மற்றும் மேலாண்மை நிலைய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



