கோவையில் குளோ பலார்ட் இந்தியா சார்பில் ‘ரீஜினல் கலர் சாம்ப்&2026’ ஓவியப் போட்டி மணி மஹால் அரங்கில் நடைபெற்றது.


இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த 470 மாணவர்கள் பங்கேற்று, வழங்கப்பட்ட தலைப்பில் தங்களது ஓவியத் திறமையை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியை எஸ்.ஐ.பி அகாடமி நிர்வாக இயக்குநர் தினேஷ் விக்டர் தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக விப்ஜி யார் பள்ளி முதல்வர் பாபி மேத்யூ, பள்ளி மேம்பாட்டு அலு வலர் கரிமா சேகல் மற்றும் பி.எஸ்.ஜி. பள்ளி தலைமையாசிரியை வேலு மணி ஆகியோர்கலந்து கொண்டனர். போட்டி யில் மாணவர்கள் கற்பனைத்திறன், படைப்பாற் றல் மற்றும் வண்ணங்க ளின் பயன்பாட்டை வெளிப்படுத்தும் வகை யில் ஓவியங்களைவரைந்து பாராட்டைப் பெற்றனர்.



