நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, ஸ்ரீமதுரை ஊராட்சிப் பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.2.98 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை, செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கூடலூர் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீமதுரை ஊராட்சிக்குட்பட்ட வடவயல் பகுதியில் பிரதம மந்திரி ஜென்மம் திட்டத்தின் கீழ் தலா ரூ.5.75 இலட்சம் மதிப்பீட்டில்; 22 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.60 லட்சம்; மதிப்பீட்டில் 3 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் விரைவில் முடித்து பொதுமக்களின் பயன் பாட்டிற்கு கொண்டு வரவும், பணிகளை கண் காணிக்கவும் அலுவலர் களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மேலும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4 இலட்சம் மதிப்பில் அம்பலமூலா முதல் வாடிவயல் வரை கால்வாய்; அமைக்கும் பணியும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் மண்வயல் பகுதியில் கட்டப்பட்டு வரும் பயணியர் நிழற்குடை பணியும், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.49 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மண்வயல் முதல் மணலி வரை சாலை பணியும் விரைவில் முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ஸ்ரீமதுரை ஊராட்சிக்குட்பட்ட வடவயல் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, கலைஞர் நகர் அமைய உள்ள இடத்தினையும், நேரில் பார்வையிடப்பட்டது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித் தார்.
இச்செய்தியாளர் பயணத்தின் போது, கூடலூர் வருவாய் கோட் டாட்சியர் குணசேகரன், வட்டாட்சியர் முத்துமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சலீம், சுப்ரமணி உட்பட பலர் உடனிருந்தனர்.



