விருதுநகர் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் சுகபுத்ரா நேற்று ஆய்வு செய்தார்.வடக்கு ரத வீதியில் குடிநீர் வழங்கும் பணிகள், உழவர் சந்தை மற்றும் எரிச்சநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டத்தை பார்வையிட்டார்.
மேலும், ஊராட்சிகளில் குடிநீர், சுகாதாரம், சாலைப் பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகளை விரைந்து முடிக்கவும்,பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத் தினார்.



