கடலூரில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் திருநங்கைகளுக்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் விலையில்லா மனைப்பட்டா வழங்கினார்.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள், தங்கள் கோரிக்கை தொடர்பான மொத்தம் 874 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
அதனை பெற்றுக் கொண்ட கலெக்டர், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி,தகுதியான.மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
பின்னர் சிதம்பரம் பகுதியை சேர்ந்த திருநங்கை பயனாளிகள் 9 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் விலையில்லா மனைப்பட்டா விற்கான ஆணையை வழங்கி னார். மேலும் பிற்படுத் தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையி னர் நலத்துறையின் மூலம் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரியம் மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.41,500 மதிப்பில் உதவித்தொகைக்கான காசோலையும்,மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் சிறுதொழில் தொடங்க உதவித் தொகையாக 5 பயனாளிகளுக்கு ரூ.64 ஆயிரம் மதிப்பி லான காசோலை யையும் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் புண்ணிய கோட்டி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) தீபா, மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நல அலுவலர் தமிழ்கனி, உதவி ஆணையர் (கலால்) ராணி, ஊராட்சிகள் உதவி இயக்கு னர் முருகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



