தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் (டிஎம்பி) நிகர லாபம் 38% உயர்ந்து ரூ.279.70 கோடியாக உள்ளதாக நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் தெரிவித்தார். தமிழ்நாடு மெர்க்கன் டைல் வங்கியானது தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு, 1921-ம் ஆண்டு துவங்கப்பட்டது.
தொடர்ந்து 100 வருடங்களுக் கும் மேலாக இலாபம் ஈட்டி வருகிறது.வங்கி 511 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றின் மூலம் நாட்டின் 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் தனது விரிவாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு ஏறத்தாழ 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது.
சென்னையில் நேற்று (ஜன.23) நடைபெற்ற இயக்குநர் குழு கூட் டத்தில் 20220-23 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு மற்றும் 2022-23ம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் முடிவடைந்த ஒன்பது மாத கால நிதிநிலை தணிக்கை முடிவுகள் இறுதி செய்யப்பட்டன.
வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் நிதி நிலை அறிக்கையினை வெளியிட்டு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2022-23-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, தனது மொத்த வணிகத்தில் 5.69% வளர்ச் சியடைந்து ரூ.78,242 கோடியை எட்டியுள்ளது.
வைப்புத்தொகை ரூ. 43,440 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது. கடன் களின் மொத்தத் தொகை ரூ 34,802 கோடி என்ற நிலையில் உள்ளது. நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு தொகை (CASA)) ரூ12,851 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது.
முன்னுரிமைத் துறை
2022-23 மூன்றாம் காலாண்டில் முன்னுரிமைத் துறைகளுக்கு (Priority Sector) வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் ரூ.23,235 கோடியில் இருந்து ரூ.25,636 கோடியாக உயர்ந்துள்ளது.
முன்னுரிமைத் துறைகளுக்கான கடன்கள் பாரத ரிசர்வ் வங்கி நிர்ணயித் துள்ள இலக்கான 40% என்ற இலக்கை விட அதிகமாக 79.67% என்ற விகிதத்தில் உள்ளது.
விவசாயத் துறைகளுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன்கள் ரூ.10,620 கோடி யாக உள்ளது. விஷிவிணி துறைகளுக்கு வழங்கப் பட்ட மொத்த கடன்கள் ரூ.11,986 கோடியில் இருந்து ரூ.12,870 கோடியாக உயர்ந்துள்ளது.
வைப்புத்தொகை ரூ.42,035 கோடியில் இருந்து ரூ.43,440 கோடியாக உயர்ந்துள்ளது. MSME ரூ.11,667 கோடியில் இருந்து ரூ.12,851 கோடியாக உயர்ந்துள்ளது. கடன் தொகை ரூ.34,802 கோடி யாக உயர்ந்துள்ளது.
இது 8.77% வளர்ச்சியை எட்டியுள்ளது. செயல் பாட்டு இலாபம் (Operating Profit) ரூ.404.81 கோடியாக உள்ளது. நிகர லாபம் ரூ.279.70 கோடியாக உள் ளது என்றார்.