fbpx
Homeபிற செய்திகள்கோவை பந்தய சாலையில் ஜல்லிக்கட்டு காளை மாடு, உலக உருண்டை சிலைகள்: பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிடுகின்றனர்

கோவை பந்தய சாலையில் ஜல்லிக்கட்டு காளை மாடு, உலக உருண்டை சிலைகள்: பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிடுகின்றனர்

கோவை பந்தய சாலையில் ஜல்லிக்கட்டு காளை மாடு, உலக உருண்டை சிலைகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகர காவல் துறை ஆணையாளர் பாலகிருஷ் ணன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

கோவை பந்தய சாலை பகுதியானது எப்பொழுதும் பொதுமக்கள் கூட் டம் மிகுந்த பகுதியாக காணப்படும் மேலும் பந்தய சாலையில் சிறுவர் விளையாட்டு பூங்கா உடற்பயிற்சி கூடம் சிறு விளையாட்டு அரங்கங்கள் என பல இடங்கள் உள்ளன
காலை மற்றும் மாலை வேளையில் நடைபெற்று மேற்கொள்வோர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து பொழுது போக்கு வது வழக்கம்.

இந்நிலையில் பந்தய சாலையை சுற்றிலும் ஏரா ளமான கோவையின் முக்கிய அடையாளங்களை விவரிக்கும் வகையில் ஆங்காங்கே சிலைகள் அமைக்கும் பணியானது தனியார் பங்களிப்புடன் நடைபெற்று வருகிறது.

அதனை தொட்ர்ந்து நேற்று கோவை பந்தய சாலையில் தனியார் பங்களிப்புடன் அமைக்கப் பட்ட ஜல்லிக்கட்டு காளை மாடு மற்றும் உலக உருண்டை சிலைகளை கோவை மாவட்ட ஆட் சியர் கிராந்தி குமார், மாநகர காவல் துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img