fbpx
Homeபிற செய்திகள்காமராஜரை அவதூறாக பேசிய யூடியூபரை கைது செய்ய வேண்டும் கோவை நாடார் சங்கம் போர்க்கொடி

காமராஜரை அவதூறாக பேசிய யூடியூபரை கைது செய்ய வேண்டும் கோவை நாடார் சங்கம் போர்க்கொடி

கோவை நாடார் சங்கம் சார்பாக டாக்டர் ஆர் பாஸ்கரன் நாடார் அறிவுறுத்தலின் படி காமராஜர் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய யூடியூபர் முக்தார் அகமதுவை கண்டித்தும் அவரை கைது செய்யக் கோரியும் சங்க பொதுச்செயலாளர் எஸ்.ஆர். விமலராகவன் நாடார் தலைமையில் பொருளாளர் சி.ராஜ மாணிக்கம் நாடார் முன்னிலையில் துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பல நாடார் சங்க அமைப்புக்கள் மற்றும் காமராஜர் தொண்டர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்து கோவை மாநகர கமிஷனர், உதவி கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இறுதியில் பத்திரிகையாளர் சந்திப்பில் பொதுச்செயலாளர் எஸ்.ஆர். விமலராகவன் கூறுகையில் முக்தார் அகமதுவை கைது செய்து தண்டிக்க வேண்டும். இல்லையேல் மக்களை திரட்டி கோவை நாடார் சங்கம் சார்பில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img