கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சி.ஸ்ரீநிவாசன் (விற்பனை, திட்டம் மற்றும் வளர்ச்சி), கோவை வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம், சூலூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் பொள்ளாச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தினை ஆய்வு செய்தார்.
அதன் தயாரிப்புகளான செழுமை நாட்டு சர்க்கரை, பகலவன் இட்லி பொடி, பருப்பு பொடி மற்றும் “ஆழியார்” கடலை எண்ணைய், நல்லெண்ணை, தேங்காய் மற்றும் கொப்பரைத் தேங்காய் ஏல விற்பனையை பார்வையிட்டு, கணிணி மென்பொருள் மூலம் விற்பனை நடவடிக்கை மேற்கொள்ளவும் வியாபாரத்தினை மேம்படுத்துவதற்கான அறிவுரை களையும் அவர் வழங்கினார். மேலும், பொள்ளாச்சி வேளாண்மை உற்பத் தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில், கல்யாண மண்டப கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார். மற்றும் ஆழியார் பச்சை பயிர் மற்றும் உருட்டு உளுந்து ஆகியவற்றின் முதல் விற்பனையை கூடுதல் பதிவாளர் சி.ஸ்ரீநிவாசன் துவக்கி வைத்தார். உடன் கோவை மண்டல இணைப்பதிவாளர் அ.அழகிரி, கோவை சரக துணைப்பதிவாளர் கோ.தினேஷ்குமார், பொள்ளாச்சி சரக துணைப்பதிவாளர் என்.வடிவேல், துணைப் பதிவாளர் அகல்யா (பயிற்சி), துணைப் பதிவாளர் ஜீவிதா (பயிற்சி) மற்றும் துறை அலுவலர்கள் உள்ளனர்.



