கோவை கொங்குநாடு மருத்துவமனையின் சார் பாக நடமாடும் இலவச பேருந்து மருத்துவ கிளினிக்கின் முதல் முகாம் கருமத்தம்பட்டி சோமனூரில் நடைபெற்றது. இம் முகாமினை கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் நித்யா ஜி.மனோகரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
கொங்குநாடு மருத்துவம னையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பி.ராஜு, கொங்குநாடு மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன் ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் கருமத் தம்பட்டி ரோட்டரி சங்கத்தலைவர் பிரபு, கருமத்தம்பட்டி நகர்மன்ற உறுப்பினர் சக்திவேல் முருகன், கொங்குநாடு மருத்துவமனையின் பொது மருத்துவர் டாக்டர் செல்வராஜ், மகப்பேறு மருத்துவர் டாக்டர் ரமிலா ராஜகோபால் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முகாமில் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த இலவச நடமாடும் பேருந்து கிளினிக்கில் ரத்த கொதிப்பு, சர்க்கரை பரிசோதனை, இசிஜி,எக்ஸ்ரே சிறுநீரக பரிசோதனைகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டன.