யூக்ரோ கேப்பிட்டல், தமிழ்நாடெங்கிலும் 15 புதிய கிளைகள் தொடங்கப்படுவதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. இந்த முக்கியமான விரிவாக்க நடவடிக்கையின் மூலம் தமிழ்நாட்டில் யூக்ரோ கேப்பிட்டலின் கிளைகள் 63ஆக உயர்ந்திருக்கின்றன.
இதன்மூலம் இந்நாட்டில் இந்நிறுவனத்தின் அதிக கிளைகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
செங்கல்பட்டு, மேட்டுப் பாளையம், சூலூர், உசிலம்பட்டி, விருதுநகர், பண்ரூட்டி, பாண்டிச்சேரி, விருத்தாச்சலம், ஆத்தூர், சேலம், வாழப்பாடி, தஞ்சாவூர், ஆம்பூர், ஆரணி மற்றும் குடியாத்தம் ஆகிய நகரங்களில் புதிய கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் இயங்கும் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடன், நிதித் தேவைகள் இதுவரை சரியாகப் பூர்த்தி செய்யப்படாத நிலைக்கு தீர்வு காண்பதே இதன் நோக்கமாகும்.
கட்டுபடியாகக்கூடிய எளிய வட்டி விகிதங்களில் கடன் வசதியைப் பெற்று தங்களது பிசினஸ் நிறுவனங்களை விரிவுபடுத்த இதுவரை குறைவான நிதி சேவை யைப் பெற்று வருகின்ற குறுசிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவு கின்ற யூக்ரோ கேப்பிட் டலின் உறுதியான செயல்திட்டத்தை இந்த முன்னெடுப்பு நடவடிக்கை அடிக்கோடிட்டுக் காட்டு கிறது.
யூக்ரோ கேப்பிட்டலின் நுண் தொழில் நிறுவனங்க ளுக்கான தலைமை பிசினஸ் அதிகாரி சத்தியன் பேசுகையில், “யூக்ரோ கேப்பிட்டல் நிறுவனத்திற்கு தமிழ்நாடு மாநிலம் எப்போதுமே மிக முக்கியமானதாக இருந்து வருகிறது. இம்மாநிலத்தின் எம்எஸ்எம்இ துறையின் செயல்திறன் மீது நாங்கள் கொண்டிருக்கும் தளராத நம்பிக்கையை பிரதிபலிப்பதாக இந்த 15 கிளைகளின் சேர்க்கை இருக்கிறது. இதன்மூலம் அந்நிறுவனங்களின் வளர்ச்சி பயணத்திற்கு பங்க ளிப்பை வழங்குவதே எமது குறிக்கோள்” என்றார்.