fbpx
Homeபிற செய்திகள்தேனியில் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு வண்ணச் சீருடைகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

தேனியில் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு வண்ணச் சீருடைகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் திருமலாபுரம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் அங்கன்வாடி மையத்தில் முன்பருவக்கல்வி குழந்தைகளுக்கு வண்ண சீருடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் முன்னிலையில் வழங்கினார்.  

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியினை மேம்படுத்தும் பொருட்டு நமது மாவட்டத்தில் செயல்படும் 1065 குழந்தை மையங்கள் செயல்பட்டு வருகின்றது. இம்மையங்களில் குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி கற்பிக்கப்படுவதுடன், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, எடைக்குறைவு இருப்பின் அதனை சரிசெய்வதற்காக சத்து ணவு, சத்துமாவு உள்ளிட்ட உணவுப்பொருட்கள் மற்றும் முன்பருவக்கல்வி போன்றவைகள் வழங்கப்படுகிறது.

அங்கன்வாடி மைய குழந்தை களிடையே ஒற்றுமை உணர்வை வளர்க்கவும், அவர்கள் அனைவரும் சமமாக கருதப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் வண்ண சீருடைகள் வழங்க திட்டமிடப்பட்டு, திருமலாபுரம் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சீருடைகளை வழங்கினார்.

முன்னதாக 5 வயது முடி வுற்ற குழந்தைக்கு முன்பருவ கல்வி நிறைவுபெற்றதற்கான சான்றிதழினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். மேலும் தேனி மாவட்டத்திலுள்ள 1065 அங்கன் வாடிமையங்களில் பயிலும் 18,005 குழந்தைகளுக்கு தலா 2 சீருடைகள் வீதம் மொத்தம் 36,010 வண்ண சீருடைகளும் மற்றும் ஆடிபாடி விளையாடு பாப்பா புத்தகமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் திட்ட அலுவலர் ரேவதி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்விசித்ரா, மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img