Homeபிற செய்திகள்கோவை 'இன்டெக்- 2024' கண்காட்சி

கோவை ‘இன்டெக்- 2024’ கண்காட்சி

கொடிசியா நிர்வாகம் சார்பில் சர்வதேச தொழில் நுட்பங்களுடன் கூடிய இயந்திரங்கள், பொறியியல், தொழில் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது
சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் கருவிகளை அறிமுகப்படுத்தும் விதமாக கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) சார்பில் இன்டெக் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, 20-வது ‘இன்டெக்-2024’ என்ற தொழில் கண்காட்சி கொடிசியா அரங்கத்தில் நேற்று தொடங்கியது. 25 ஆயிரம் சதுர மீட்டரில் பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
இந்த தொழில் கண்காட்சியை கண்காட்சியை டி.வி.எஸ். சப்ளை செயின் சொலியூஷன்ஸ் நிர்வாக தலைவர் தினேஷ், சி.ஐ.ஐ. தென்மண்டல தலைவர் நந்தினி ரங்கசாமி ஆகியோர் ரிப்பன் தொடங்கி வைத்தனர்.
இந்த கண்காட்சியில் அமெரிக்கா, தைவான், சீனா, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்துள்ள பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

இதுதவிர மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, ஒடிசா மற்றும் தமிழ்நாத்தை சேர்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்களும் என மொத்தம் 495 நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன.

கண்காட்சியில் வாகனங்களுக்கு தேவையான உதிரிபாகங்க, அதனை தயாரிப்பதற்கான இயந்திரங்கள், மார்பிள்ஸ் கட்டிங் இயந்திரங்கள், நவீன தானியங்கி இயந்திரங்கள், கணினி மூலம் இயங்கும் எந்திரங்கள், மோட்டார் சைக்கிள், கார், பஸ், லாரி போன்ற வாகங்களின் கீயர் பாக்ஸ், இன்ஜின்கள், மோட்டார்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்ட நவீன இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

இதுதவிர அளவீட்டு கருவிகள், காஸ்டிங், போர்ஜிங், அளவை எந்திரங்கள், கட்டிங் டூல்ஸ், மெக்கானிக்கல் பவர் டிரான்ஸ்மிஷன், ஜெனரேட்டர்கள், ஆல்டர்னேட்டர், எலக்ட்ரிக் மோட்டார்கள், ஏர் கம்பரசர், லேசர் கட்டிங் மிஷின்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், பார் கோடு பிரிண்டர்கள், மெட்டீரியல் ஹேண்ட்லிங் சாதனங்கள், எடைமேடை, தராசுகள், காகித உற்பத்தி கப் உற்பத்தி இயந்திரங்கள், பவுண்டரி கருவிகள் இடம் பெற்று உள்ளன.

வரும் 10ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சிக்கு காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை அனுமதி வழங்கப்படுகிறது. கண்காட்சியை பார்வையிட ரூ.150 நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கண்காட்சியில் இடம்பெற்றுள்ல இயந்திரங்கள் நிறுவனத்தினருக்கு இயக்கி காட்டி விளக்கம் அளிக்கப்படுகிறது. அதுபோல் மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் இக்கண்காட்சியை பார்வையிடலாம். மாணவர்கள் வரும் 10ம் தேதி அன்று மட்டும் மதியம் 2 மணிக்கு மேல் கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம்.

வரும் 9ம் தேதி மாலை 6.30 மணியளவில் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இன்று மாலை 4.45 மணியளவில் 11-வது சர்வதேச உற்பத்தியாளர்கள் கூட்டம்-2030 கொடிசியா அரங்கிலேயே நடக்கிறது.
இந்த கண்காட்சியின் தொடக்க விழாவில் கொடிசியா தலைவர் சிவஞானம், கண்காட்சி தலைவர் ராமச்சந்திரன், கொடிசியா செயலாளர் சசிகுமார், கண்காட்சி துணை தலைவர் பொன்னுச்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img