இந்து சமய அறநிலையத்துறையின் கோவை மாவட்ட அறங்காவலர் குழு நிர்வாகிகள் பதவியேற்பு விழா கோனியம்மன் கோவிலில் நடந்தது. குழு தலைவராக கோவை மாவட்ட அறங்காவலர் மெட்டல் ராஜாமணி, அறங்காவலர் குழு உறுப்பினர்களாக சு.தனபால், கர்ண பூபதி, கவிதா கல்யாண சுந்தரம், பார்த்திபன் மயில்சாமி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில், மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், திமுக பொதுக்குழு உறுப்பினர் ரகு துரைராஜ், எஸ்.எம்.டி.கல்யாண சுந்தரம், பெரிய கடைவீதி பகுதி -2 திமுக செயலாளர் விஐ பதுருதீன், கோனியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் வி.லட்சுமணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வி.ஆர்.வெங்கடேஷ், வைரமணி, மனோஜ் குமார், மாநகர் மாவட்ட பொறியாளர் அணி தலைவர் கண்ணதாசன் (முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர்), திமுக வட்டச் செயலாளர்கள் பா.ஆனந்த், விஜயகுமார், மாநகராட்சி உறுப்பினர்கள் சுமா விஜயகுமார், கேசவன் மற்றும் ராஜா, கட்சி நிர்வா கிகள், இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.