fbpx
Homeபிற செய்திகள்செய்தியாளர் பயணத்தில் கோவை கலெக்டர் தகவல்: 5 ஆண்டுகளில் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து பயனடைந்த 10,696...

செய்தியாளர் பயணத்தில் கோவை கலெக்டர் தகவல்: 5 ஆண்டுகளில் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து பயனடைந்த 10,696 விவசாயிகள்

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் வட்டாரம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், தீத்திபாளையம் கிராமத்தில் சொட்டுநீர் பாசனத் திட்டத்தின் கீழ் ரூ.1,15,337 மானியத்தில், சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்ய மாவட்டஆட்சித் தலைவர் பவன்குமார் க. கிரியப்பனவர் தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இச்செய்தியாளர் பயணத்தின்போது மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆனந்தகுமார், தோட்டக்கலை துணை இயக்குநர் பாலசுப்பிரமணியம் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தவும் குறைந்த நீரில் அதிக பரப்பில் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் அதிக விளைச்சல் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும், நுண்ணீர் பாசன முறையினை தமிழ்நாடு விவசாயிகளிடையே பிரபலபடுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தோட்டக்கலை துறையின் மூலம் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசன அமைப்பு நிறுவ சிறு குறு விவசாயிகளுக்கு 100% மானியமும் இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்பட்டு வருகின்றது. சிறு குறு விவசாயிகள் அதிக பட்சமாக 2 ஹெக்டர் வரையிலும், இதர விவசாயிகள் 5 ஹெக்டர் வரையிலும் பயன் பெறலாம்.

அதன்படி, கோவை மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 11912 ஹெக்டர் பரப்பளவில் ரூ.108.31 கோடி மதிப்பீட்டில் சொட்டு நீர் பாசனம் அமைத்து 10,696 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம், தீத்திபாளையம் கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் சொட்டுநீர் பாசனத் திட்டத்தின் கீழ் ரூ.1,15,337 மானியத்தில் ரூ.1,59,178 -மதிப்பீட்டில் 1.29 ஹெக்டர் பரப்பில் சொட்டுநீர்ப்பாசனம் அமைத்து வாழை சாகுபடி செய்துள்ளார். அவரது தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, விவசாயிடம் இத்திட்டத்தின் செயல்பாடு மற்றும் பயன் குறித்து கேட்டறிந்தார். இத்திட்டத்தின் மூலம் அதிகளவில் தண்ணீர் சேமிக்கப்பட்டதாகவும், களைச்செடிகள் வளர்வது குறைந்துள்ளதாகவும், விளைச்சல் அதிகரித்துள்ளதாகவும் விவசாயி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தெரிவித்தார். மேலும், இத்திட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு விஸ்வநாதன் நன்றி தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img