கோவை, பேரூர் ஆதீனம் மடத்தில் இஸ்லாமியர் ஒருவருக்கு “மத நல்லிணக்க செம்மல்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட சுவாரசிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
கோவை சாய்பாபா காலனியில் வசித்து வரும் முகமது ரஃபி. தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினராக உள்ள இவர், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தை ஆரம்பித்து பல்வேறு நல்லிணக்க பணிகளை செய்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மத நல்லிணக்க பணிகளை மேற்கொண்டு வருகின்ற முகமது ரஃபியை அங்கீகரித்து போற்றும் வகையில், பேரூர் ஆதீனம் மடத்தின் மருதாசல அடிகளார், முகமது ரஃபிக்கு “மத நல்லிணக்க செம்மல்” விருது வழங்கி கௌரவித்து நெகிழ்ந்துள்ளார்.

விருது வழங்கியது குறித்து பேசிய மருதாச்சல அடிகளார், பேரூர் மடத்தின் முன்னாள் மாணவர் முகமது ரஃபி மத நல்லிணக்கத்திற்காக பாடு படுவது போற்றத்தக்கது என தெரிவித்தார். வருடம் தோறும் அனைத்து மதத்தவரையும் ஒன்றி
ணைத்து மடத்தில் மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழாவை முகமது ரஃபி நடத்தி நல்லிணக்கம் பேணுவதாக தெரிவித்த அடிகளார், இதுபோன்று அனைத்து மத விழாக்களையும் நடத்தி ஒற்றுமையை உலகிற்கு பறை சாற்றுவதால், மத நல்லி ணக்க செம்மல் விருதை முகமது ரஃபி அவர்களுக்கு வழங்கி கௌரவிப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித் தார். விருது பெற்ற முகமது ரஃபி பேசும்போது, நாட்டில் சமத்துவம் சகோதரத்துவம் தழைத்தோங்கி, சமா தான சுகவாழ்வு பெற்று அனைவரும் நல்லிணக் கத்துடன் வாழ வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்றார். அதற்காகவே இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என அனைத்து மதத்தைச் சார்ந்த பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைத்து “பல் சமய நல்லுறவு இயக்கம்“ என்ற நல்லிணக்க அமைப்பை கட்டமைத்து களப்பணியாற்றுவதாக தெரிவித்தார்.
வேற்றுமையில் ஒற்றுமை, நமது நாட்டின் பலம் என தெரிவித்த முகமது ரஃபி, அன்பை மட்டுமே அனைத்து மதங்களும் உணர்த்துவதாகவும், அந்த அன்பை பரிமாறி மத நல்லிணக்கத்தோடு அனைவரும் சமூகத்தில் இயங்க வேண்டும் என வலியுறுத்தினார். கடந்த 15 ஆண்டுகளாக பொங்கல், கிறிஸ்மஸ், ரம்ஜான் என அனைத்து பண்டிகைகளையும் பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பாக மத நல்லிணக்க விழாக்களாக கொண்டாடி வருவதாக தெரிவித்த அவர், நல்லிணக்க கலாச்சாரம் நாடு எங்கும் வியாபிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினராக உள்ள முகமது ரஃபிக்கு மத நல்லிணக்க செயல் பாடுகளுக்காக தமிழ் நாடு அரசால் கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது வழங்கி கௌரவிக்கப்பட் டிருப்பது குறிப்பிடத்தக்கது.



