fbpx
Homeபிற செய்திகள்தூய்மை பணியாளர்களுக்கு மழை கோட் வழங்கிய பேரூராட்சி

தூய்மை பணியாளர்களுக்கு மழை கோட் வழங்கிய பேரூராட்சி

சிதம்பரம் அண்ணாமலைநகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூய்மை பணியாளர்களுக்கு மழை கோட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பேரூராட்சி செயல் அலுவலர் பா.கோமதி முன்னிலையில் பேரூராட்சி மன்ற தலைவர் க.பழனி,தூய்மை பணியாளர்களுக்கு மழை கோட்டுகளை வழங்கினார்.

இதில் துப்புரவு அலுவலர் ப.துரைராஜ் உள்ளிட்ட பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள், சுயஉதவிக்குழு மூலம் பணியாற்றும் – தள்ளுவண்டி பணியாளர்கள் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் மழைக்கோட் வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img