fbpx
Homeபிற செய்திகள்விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு இசையமைப்பாளர் இமான் பரிசு வழங்கினார்

விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு இசையமைப்பாளர் இமான் பரிசு வழங்கினார்

உசிலம்பட்டியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இசையமைப்பாளர் இமான் பரிசுகள் வழங்கினார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, பிரண்ட்ஸ் பிலிம் பேக்டரி மற்றும் பட்டர்பிளை உள்ளூர் தொலைக்காட்சி இணைந்து நடத்திய மாநில அளவில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

இதில், நடன போட்டி, சமையல் போட்டி, மேக்கப் போட்டி, கோலப்போட்டி, பேன்சி ட்ரெஸ் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

இதில் ,சிறப்பு விருந்தினராக உசிலம்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மற்றும் இசையமைப்பாளர் இமான் ஆகியோர் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் விருதுகளை வழங்கி கௌரவித்தார்கள்.

இதில், உசிலம்பட்டி நகர மன்றத் தலைவர் சகுந்தலா மற்றும் உசிலம்பட்டி திமுக நகர செயலாளர் தங்கபாண்டியன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை, பட்டர்பிளை உள்ளூர் தொலைக்காட்சியின் உரிமையாளர் கிஷோர் செய்தார்.

படிக்க வேண்டும்

spot_img