fbpx
Homeபிற செய்திகள்அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய துணைவேந்தர் ரவி

அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய துணைவேந்தர் ரவி

சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள சிதம்பரம் அரசு கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் (பொ) ஆ.அர்ச்சுனன் தலைமை வகித்துப் பேசினார்.

சிறப்பு விருந்தினராக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் க.ரவி பங்கேற்று 14 துறைகளைச் சேர்ந்த 800 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.

அவர் பேசுகையில், சிதம்பரம் அருகே உள்ள சாக்காங்குடி கிராமத்தில் நான் படிப்பை தொடங்கி தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ளேன்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மாணவர்களாகிய நீங்கள் என்னைப் போன்று படித்து முன்னேறி உயர் பதவிகளுக்கு வர வேண்டும். அதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்றார்.

பட்டமளிப்பு விழாவை துறைத் தலைவர்கள் டார்லிங்குயின், அறிவழகன், ரவி உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து நடத்தினர். விழாவில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img