fbpx
Homeபிற செய்திகள்சிதம்பரம் வீனஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சிதம்பரம் வீனஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் சிதம்பரம் வீனஸ் மழலையர்,தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான ‘அறிவியல் திறமை’ கண்காட்சி நடைபெற்றது.

கண்காட்சியில் வீனஸ் மழலையர், தொடக்கப் பள்ளி, சிதம்பரம் மற்றும் அம்மாபேட்டை பள்ளிகளின் மாணவ, மாணவிகளின் அறிவியல் படைப்புகள் இடம்பெற்றன.

வீனஸ் குழும பள்ளிகளின் தாளாளர் எஸ். குமார் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ரூபியாள்ராணி முன்னிலை வகித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக மருந்தியல் துறை பேராசிரியர் வி.பார்த்தசாரதி அறிவியல் கண்காட்சியை தொடக்கிவைத்து பார்வையிட்டார்.

முன்னதாக, அப்துல் கலாம் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img