கோவை பன்னிமடை பகுதியில் பில்லூர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.134 கோடி மதிப்பீட்டில் 73 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சேகரிப்பு தொட்டி கட்டுமானப்பணியினை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
உடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தில்குமார் உள்பட அலுவலர்கள் உள்ளனர்.