கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.17க்குட்பட்ட கவுண்டம்பாளையம், பகவதி வீதியில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் விநியோகம் முறையாக உள்ளதா மற்றும் தெருவிளக்குகள் எரிகிறதா என்பது குறித்து பொதுமக்களிடம் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கேட்டறிந்தபோது எடுத்தபடம்.
உடன் மாமன்ற உறுப்பினர் சுபஸ்ரீ, உதவி ஆணையர் சேகர், உதவி செயற்பொறியாளர் (பொ) கருப்பசாமி, நகரமைப்பு அலுவலர் கலாவதி, மண்டல சுகாதார அலுவலர் திருமால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.