சிதம்பரம் வட்டம் சிவபுரி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம்(2022-23)ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் 300 விவசாய குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் இலவசமாக நேற்று (திங்கள்கிழமை) வழங்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கடலூர் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையன் மற்றும் வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) கென்னடி ஜெபக்குமார் வோளண்மை உதவி இயக்குனர் அமிர்தராஜ் மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவர் அன்பரசன் விதைச் சான்று அலுவலர் சுகந்தி, கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் துணை வேளாண்மை அலுவலர் நடராஜன் உதவி வேளாண்மை அலுவலர் மாலினி, ஆத்மா திட்ட பணியாளர்கள் பிரகாஷ், தண்டபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.