ஜனவரி 30 திமுக காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரகாசமாக உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்தார்.
ஈரோடு திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் இளங்கோ வனை ஆதரித்து திருநகர் காலனி பகுதியில் நடைபெற்ற ஊழியர் கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
முதலமைச்சர் பல்வேறு நல திட்டங்களை அமலாக்கி வருகிறார். இதனால் இளங்கோவனின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஈரோட்டில் கூட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடக்கின்றன. மழைநீர் வடிகால்கள் கூட புதிதாக அமைக்கப்படுகின்றன.
சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் சித்தா ஓமியோபதி ஆயுர்வேதா டாக்டர்கள் 130 பேர்க்கு பணி ஆணை வழங்கினார். மருத்துவத் துறையில் மேலும் 800 பேர் நியமிக்கப்பட உள்ளனர். மருத்துவர் துறைதேர்வு வாரியம் மூலம் தேர்வு எழுதி பணியில் சேரலாம்.
ஈரோடு அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் ஏற்கனவே ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட ஊதியத்தை பெறுவதற்கு சம்மதித்த னர் ஒப்பந்த நிறுவனம் அந்த ஊதியத்தை வழங்க கேட்டுக்கொள்ளப்படும்.
பெண்கள் சாணிபவுடர் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர் எனவே சாணி பவுடர் விற்பனையை தடை செய்தோம். எலி காய்ச்சலால் இறப்பு சேர்ந்ததாக குறிப்பிட்டால் உரிய விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.