கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் விழிப்புணர்வு குறும்படப்போட்டி விருது விழாவில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டு, போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி, பாராட்டினர்.
உடன் பி.எஸ்.ஜி. கல்லூரி செயலாளர் கண்ணையன், மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு பிரிவு ஆலோசகர் சரண்யா, துறைத் தலைவர் / காட்சி ஊடகத்துறை ராதாகுருசாமி, துணை முதல்வர்கள் ஜெயந்தி, உமாராணி மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளனர்.