மாருதி சுசூகி கார்கள் விற்பனையில் முன்னணி டீலராக திகழும் விஷ்ணு கார்ஸ் ஒரே நாளில் சென்னையில் 206 கார்களை டெலிவரி செய்து சாதனை படைத்துள்ளது.
சென்னையில் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு மாருதி டீலரிடம் இருந்து டெலிவரி செய்யப்பட்ட அதிகபட்ச டெலிவரி இதுவாகும். விஷ்ணு கார்ஸ் நிர்வாக இயக்குநனர் வெங்கட் ராவ் கூறுகையில், நியூ பாண்டியன் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு 206 கார்களை வெற்றிகரமாக டெலிவரி செய்வதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
எங்கள் வளர்ச்சியில் இது சிறப்பானதொரு மைல்கல்லை குறிக்கிறது என்றார். நியூ பாண்டியன் டிராவல்ஸ், 75-க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாகனங்களை இயக்கி வரும் தென்னிந்தியாவின் முன்னணி டிராவல்ஸ் நிறுவனமாக உள்ளது.
நியூ பாண்டியன் டிராவல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நடராஜன் கூறுகையில், டிராவல்ஸ் துறையில் 18 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த நிறுவனம் ஆகும்.
தற்போது சிஎன்ஜி வாகனங்களை அறிமுகம் செய்வதன் மூலம் சுற்றுச் சூழலை பாதிக்காத நிலையான எதிர்காலத் திற்கான எங்கள் பங்களிப்பை வழங்கி போக்குவரத்துத்துறையில் சிறப்பான சேவை செய்ய இருக்கிறோம் என்றார்.
மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான பிராந்திய மேலாளர் பரத் சம்பத், நியூ பாண்டியன் டிராவல்ஸ் நிறுவனர் மற்றும் இயக்குநர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.