கோவை, துடியலூர் வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறி யியல் கல்லூரியில், பள்ளி மாணவருக்கான உயர் கல்வி பயிலுதல் பற்றிய வழிகாட்டி நிகழ்ச்சி கல் லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
முதல்வர் என்.ஆர் அலமேலு வரவேற்றார் .
தொழில்நுட்ப கல்விக் கான அகில இந்திய கவுன்சிலின் ஐடியா லேப் மற்றும் இன்ஸ்டிடியூஷன் இன்னோவேஷன் கவுன்சில் மூலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பள்ளி மாண வர்களுக்கான திறன் மேம்பாட்டு மற்றும் உயர் கல்வி பயிலுதல் பற்றிய வழிகாட்டி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக எதிர்கால தொழில் மற்றும் கல்வி வழிகாட்டல் நிபுணர் மற்றும் ஆய்வாளர் அஸ்வின் பங்கேற்றார்.
அவர் பேசும்போது, உயர்கல்வியின் மகத்துவத் தையும் பெண்கல்வியின் மகத்துவத்தையும் எடுத் துரைத்தார். மாணவ, மாணவிகள் பன்னிரண் டாம் வகுப்பு முடிந்தவுடன் தங்களின் எதிர்கால கல்வி குறித்து எவ்வாறு திட்டமிடல் வேண்டும்.
என்.ஐ.டி ஐ.ஐ, எஸ்.சி, ஐ.ஐ.டி மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள், மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு எவ்வாறு மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என விளக்கக்காட்சி மூலம் கூறினார்.
படிப்பதற்கு மனம் ஆசைப் பட வேண்டும் என்பதனையும் அதற்கு பணம் ஒரு பொருட்டல்ல என்பதை மனதில் கொண்டு அரசு பள்ளி மாணவ. மாணவிகள் எவ்வாறு இக்காலகட்டத்தில் சாதிக் கின்றனர் என்பதனையும் புள்ளிவிவரத்துடன் விளக் கியது மாணவர்களுக்கு பய னுள்ளதாக அமைந்தது .
சுமார் ஆயிரத்து ஐநூற்றுக்கு மேற்பட்ட அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். கல்லூரியின், விளையாட்டுத்துறை, ஆங்கில இலக்கிய சமூகம், தமிழ் மன்றம், ஐடியா லேப் , ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன், ஏரோ மாடலிங் என பல்வேறு குழுக்கள் நடத்திய செயல்பாடு அடிப்படையிலான கற்றல் மூலம் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். சிறப்பாக திறமைகளையும் வெளிப்படுத்திய மாணவ, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கல்லூரியின் தகவல் தொழில் நுட்பத்துறை தலைவர் செந்தமிழ் செல்வி , நாட்டு நலப்பணி திட்ட தலைவர் கேசவசாமி ஆகியோர் ஏற்பாடு செய் திருந்தனர்.