இந்தியாவின் போக்குவரத்துத் தொழில் துறையில் முக்கியப் பங்காற்றுவதற்காக, டாடா ஸ்டீல், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவில் ( (Madras Research Park) போக்குவரத்தில் புதுமைத் தொழில் நுட்பத்திற்கான மையத்தை (சிஐஎம் -Centre for Innovation in Mobility (CIM)) ) அமைத்துள்ளது.
புதிய மையம் கல்வி நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்துத் துறையுடன் நெருக்கமாக செயல்படும். வாகனம் (ஆட்டோமோட்டிவ்), ரயில்வே மற்றும் அதிவேக வளையப் போக்கு வரத்து (ஹைப்பர்லூப்) போன்ற தற்போதைய மற்றும் எதிர்காலப் போக்குவரத்துத் தளங்களுக்கான பயன்பாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்கும்.
இந்த புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R அண்ட் D) மையத்தில் கணினி உதவி வடிவமைப்பு மற்றும் கணினி உதவி பொறியியல் (CAD/CAE), பரிசோதனை உருவாக்கம், டைனமிக் டென்ட் சோதனை அமைப்பு, ஏஆர்/bfEjd (AR/VR) அனுபவ மையம் மற்றும் வாகன தரப்படுத்தலுக்கான முழு அளவி லான வசதிகள் உள்ளன.
இந்த மையம் ஏற்கெனவே ஜாம்ஷெட்பூரில் உள்ள நவீன பயன்பாட்டு ஆராய்ச்சி மையத்துடன் கூடுதல் மையமாக செயல்படும். வடிவமைப்பு மற்றும் பொறியியல், பொருள் தேர்வு, முன்மாதிரி உருவாக்கம் (ப்ரோடோ டைப்) மற்றும் சோதனை ஆகியவற் றுடன் போக்குவரத்துத் துறைக்கு இது உதவும்.
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக அதிகாரி டி.வி. நரேந்திரன் கூறியதாவது: முன் னோடி தொழில்நுட்பங்களை வளர்ப்பதில் டாடா ஸ்டீல்ஸ் எப்« பாதும் முன்னணியில் இருக்கும்.
சென்னை ஐஐடி-யில் உள்ள புதிய மையம், எதிர்கால போக்குவரத் துக்கான புதுமையான தீர்வுகளை உருவாக்குவதற்கான எங்கள் உறுதி யான நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்யும் மற்றொரு வழியாகும் என்றார்.
டாடா ஸ்டீல் டெக்னாலஜி மற்றும் நியூ மெட்டீரியல் பிஸினெஸ் பிரிவின் வணிகப் பிரிவுத்துணைத் தலைவர் டாக்டர் தேபாஷிஷ் பட்டாச்சார்ஜி கூறியதாவது:
வாகனப் போக்குவரத்து புதுமைத் தொழில் நுட்ப மையம், ஹைப்பர்லூப் மற்றும் ஏர் டாக்சிகள் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் உட்பட, போக்குவரத்துக்கான மல்டி மெட்டீரியல் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தீர்வுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் என்றார்.
சென்னை ஐஐடி பேராசிரியர் மற்றும் சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்கா, ஐஐடிஎம் இன்குபேஷன் செல் மற்றும் ஆர்டிபிஐ பிரிவுத் தலைவர் அசோக் ஜுன்ஜுன்வாலா கூறியதாவது:
புத்தாக்கத்திற்கான இந்தப் புதிய மையத்தைத் தொடங்குவதன் மூலம், உலகளாவிய அளவில் போக்குவரத்து அம்சங்களைக் கணிசமாக மாற்றி அமைப்பதற்கான உள்நாட்டு தொழில்நுட்பங்களை வணிகமயமாக்குவதில் எங்கள் சக்தியை கூட்டாகப் பயன்படுத்துவதை எதிர்நோக்கி உள்ளோம் என்றார்.
சமீபத்தில், டாடா ஸ்டீல் மற்றும் ட்யூட்ர் ஹைப்பர்லூப் (TuTrHyperloop) நிறுவனங்கள் இணைந்து ஹைப்பர்லூப் தொழில் நுட்பத்தை மேம்படுத்துதல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றில் இணைந்து பணியாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் சென்னை ஐஐடி-யில் கையெழுத்திட்டன.