கத்தார் நாட்டில் நடை பெற்ற உலக கால்பந்து 2022 போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு, உணவு உபசரிக்கும் வகையில் உணவு நிபுணர்களுக்கு உதவவும், கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேலாண் மையில் பயிற்சிக்காக சென்ற காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் ஹோட்டல் மேலாண்மை நிறுவன மாணவ, மாணவியர் 355 பேர் பயிற்சி முடித்து திரும்பினர்.
சென்னை அடுத்த காட்டாங்குளத்தூரில் இயங்கி வரும் எஸ்ஆர்எம் ஹோட்டல் மேலாண்மை நிறுவனம் (SRM Insitute of «ý£†ì™ management) கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேலாண்மை கல்வி வழங்குவதில் நாட்டில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது.
இந்நிறுவனத்தில் பயின்றவர்கள் பல்வேறு நாடுகளில் உள்ள ஸ்டார் ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்டுக்கள் மற்றும் கப்பல்கள், விமானங்களில் நல்ல ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.
கடந்தாண்டு இறுதியில் கத்தார் நாட்டில் நடைபெற்ற உலக கால்பந்து 2022 போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கால்பந்து வீரர்கள், பயிற்சியாளர்கள் அலுவலர்கள், விருந்தினர்கள் என பெருமளவில் அங்கு வந்திருந்தனர். அவர்க ளுக்கு தேவையான தங்குமிடம் உணவு வசதிகளை கத்தார் நாடு ஏற்பாடு செய் திருந்தது.
3 மாதம் பயிற்சி
இவர்களுக்கு உணவு தயாரிக்கும் உணவு நிபுணர்களுக்கு உதவுவதற்காக மற்றுமின்றி நிபுணர்களிடம் 3 மாதம் பயிற்சி பெரும் வகையில் எஸ்ஆர்எம் ஹோட்டல் மேலாண்மை நிறுவன மாணவ, மாணவியர் 355 பேர் கத்தார் நாட்டிற்கு போட்டி நடப்பதற்கு முன்பாகவே அனுப்பி வைக்கப்பட்டனர். இவர் களுக்கு பயிற்சி உதவித் தொகையாக மாதம் ரூ.80,000 வீதம் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்பட்டது.
3 மாத பயிற்சிக்கு பின் இந்தியா திரும்பிய எஸ்ஆர்எம் ஹோட்டல் மேலாண்மை நிறுவன மாணவ, மாணவியர் 355 பேர் மீண்டும் காட்டாங் குளத்தூர் எஸ்ஆர்எம் ஹோட்டல் மேலாண்மை நிறுவனத்தில் தங்களின் கல்வியை தொடர்ந்தனர். கத்தார் நாட்டிற்கு சென்று பயிற்சி முடித்து திரும்பிய மாணவ, மாணவியரை எஸ்ஆர்எம் நிர்வாகத்தினர் பாராட்டினார்.