அமேசான் பிசினஸ் (Amazon Business), ஆறு ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், தகுதியான வணிக வாடிக்கையாளர்களுக்கு மெய்நிகர் கிரெடிட்டை வழங்க, அமேஸான் பே லேட்டர் (Amazon Pay Later) உடன் அதன் ஒருங்கிணைப்பை அமேஸான் பிசினஸ் அறிவித்தது.
2023-24 பட்ஜெட்டின் போது எம்.எஸ்.எம்.இ. (MSME)) துறைக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தை மறுசீரமைப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் நோக்கம், எம்.எஸ்.எம்.இ. அமைப்புகள் தங்கள் செயல்பாடுகளை அளவிடுவதற்கு கடன் கிடைப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தது.
தகுதியான வாடிக்கையாளர்களுக்கு வெர்ச்சுவல் கிரெடிட்டை (virtual credit) வழங்க அமேஸான் பே லேட்டர் உடனான இந்த
ஒருங்கிணைப்பு, நாடு முழுவதும் உள்ள வணிக வாடிக்கையாளர்களை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்தை அமேசான் பிசினஸ் முன்னெடுத்துச் செல்லும்.
அமேசான் பே லேட்டர் மூலம், வணிக வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்து உடனடி கிரெடிட்டைப் பெற முடியும். இதன் மூலம் அனைத்து வகைகளிலும் தயாரிப்புகளை தடையின்றி வாங்கலாம்.
தடையில்லா கட்டண அனுபவத்துடன், Amazon.in இணையதளத்தில் பில் பணம் செலுத்தவும், அமேஸான் பே கார்ப்பரேட் பரிசு அட்டைகளை வாங்கவும், பயணம், காப்பீடு மற்றும் பலவற்றை செய்யவும் இந்த கிரெடிட்டைப் பயன்படுத்த முடியும்.
அமேசான் பிசினஸ் நிறுவன இயக்குநர் சுசித் சுபாஸ் கூறுகையில், பரந்த டெலிவரி கவரேஜ் மற்றும் டிஜிட்டல் கொள்முதலில் புதுமைகள் ஆகியவற்றுடன் ஜிஎஸ்டி செயல்படுத்தப்பட்ட தேர்வின் மிகப்பெரிய வகைப்படுத்தலை ஒன்றாகக் கொண்டுவருவதை எப்போதும் இலக்காகக் கொண்டுள்ளோம்.
வாடிக்கையாளர்களை முன்னணியில் வைத்துக்கொண்டு, அவர்களுக்குக் கடனுக்கான அணுகலை வழங்குவதற்காக அமேஸான் பே லேட்டர் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.